பிரான்ஸில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிகழவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை
#France
#Protest
#Ban
#ஆர்ப்பாட்டம்
#லங்கா4
#Palestine
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
பரிசில் இடம்பெற உள்ள பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பரிசில் இடம்பெற இருந்த நிலையில், காவல்துறை பொறுப்பதிகாரி Laurent Nunez, 'ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிப்பதாக' அறிவித்துள்ளார்.
"ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ள அமைப்பினர் ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் என அறிய முடிகிறது. என ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கிறேன்!" என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 31 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், சென்றவார சனிக்கிழமை பரிசில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே மீண்டும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.