பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 12 பேர் பலி!
#SriLanka
#world_news
#Lanka4
#Bangladesh
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பங்களாதேஷின் கிஷோர்கஞ்சில் சரக்கு ரயில் ஒன்று பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைரப் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது,
ரயிலுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்களை மீட்பதற்காக மீட்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் பலர் சேதமடைந்த பெட்டிகளுக்கு அடியில் சிக்குண்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


