இஸ்ரேல் கட்டார் மீது தாக்குதல்! மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம்
#world_news
#Israel
Mayoorikka
6 hours ago

இஸ்ரேல், கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைமை உறுப்பினர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் ஹமாஸின் டோஹா பணியகத் தலைவர் கலீல் அல்ஹையா உள்ளிட்ட தலைவர்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணவ உயர் அதிகாரி ஒருவர் தாக்குதலின் முடிவுக்காக தற்போது காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ள கத்தாரின் வெளிவிவகார பேச்சாளர் மேஜித் அல்அன்சாரி இதை “பயம் கலந்த குற்றச் செயல்” என்றும், சர்வதேச சட்டங்களையும் ஒழுங்குகளையும் முற்றிலும் மீறியதாகும் எனக் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



