மூன்று கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டுப் பெண் கைது!
#SriLanka
#Arrest
#Airport
#drugs
#Foriegn
Mayoorikka
2 years ago
பெரிய ஆங்கில எழுத்துக்கள் கொண்ட 08 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மறைத்து வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவர் முதன்முறையாக இலங்கைக்கு வந்த 42 வயதான இந்தோனேசிய பெண் எனவும், அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்ப கட்ட சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் முதலில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, இந்த போதைப்பொருள் கையிருப்புடன் கத்தாரின் தோஹாவுக்கு வந்தார்.
ஆங்கிலக் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களின் அட்டைகளை கவனமாக வெட்டி தயார் செய்து தன் பொதிகளில் மறைத்து வைத்து கடத்தலில் ஈடுபட்டிருந்தார்.