எவ்வாறான சவால்கள் வந்தாலும் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற மாட்டேன் : மஹ்மூத் அப்பாஸ்!

#world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
எவ்வாறான சவால்கள் வந்தாலும் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற மாட்டேன் : மஹ்மூத் அப்பாஸ்!

எவ்வாறான சவால்கள் வந்தாலும் தனது மண்ணை விட்டு வெளியேற மாட்டேன் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.  

காஸா நெருக்கடி தொடர்பாக எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பாலஸ்தீன ஜனாதிபதி, மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று கூறி அப்பகுதியிலிருந்து மக்களை அகற்றுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

அமைதி மாநாடு என்று அழைக்கப்படும் இந்த மாநாட்டில் ஜோர்டான், கத்தார், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகியவை பங்கேற்காத முக்கிய நாடுகளில் உள்ளன. மாநாட்டில் பேசிய ஜோர்டான் மன்னர் அப்துல்லா, காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து உலக மௌனம் நிலவுவதை கண்டித்துள்ளார். 

அத்துடன்இஸ்ரேலிய உயிர்களைப் போல பாலஸ்தீன உயிர்கள் முக்கியமில்லை என்ற செய்தியை அரபு நாடுகளுக்கு அனுப்புவோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!