இஸ்ரேல் - ஹமாஸ் மோதலினால் 21 பிரெஞ் மக்கள் கொல்லப்பட்டும், 11 பேர் காணமல் போயுமுள்ளனர்
#France
#Israel
#Lanka4
#லங்கா4
#Missing
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலில் 21 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நிலப்பரப்பு மீது ஹமாஸ் அமைப்பு இன்று ஒன்பதாவது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. தாக்குதலில் மொத்தமாக 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். (முன்னதாக வெளியிடப்பட்ட தரவுகளின் படி 18 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது) மேலும், 11 பேர் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை எனவும், இந்த எண்ணிக்கை கவலையளிப்பதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதேவேளை, காணாமல் போயுள்ளவர்கள் பணையக்கைதிகளாக ஹமாஸ் குழுவினரால் பிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளது.