யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கைமாறுகின்றது!

#SriLanka #Sri Lanka President #Jaffna
Mayoorikka
2 years ago
யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு கைமாறுகின்றது!

யாழ் ஜனாதிபதி மாளிகையின் வளாகத்தை  இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகை வளாகம் 29 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது, அதில் 12 ஏக்கர் கட்டிடத் தொகுதிகள் அமைந்துள்ளன.

 எஞ்சிய நிலம் அப்பகுதி மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு, அரசுக்கு சொந்தமான 12 ஏக்கரை SLIITக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.

 மக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட எஞ்சிய 17 ஏக்கர் காணியை வருமானத்தின் அடிப்படையில் SLIIT நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

 தற்போது, ​​இந்தக் காணி கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், உரிய குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர், குறித்த வளாகம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு விடுவிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4