வருவாயை அதிகரிக்க வேண்டும் - வரியை அதிகரிக்க முடியாது!

#SriLanka #economy #Ranjith Siambalapitiya
PriyaRam
2 years ago
வருவாயை அதிகரிக்க வேண்டும் - வரியை அதிகரிக்க முடியாது!

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என்றும் வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வருமானம் ஈட்டும் திணைக்களங்களின் தலைவர்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடியவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நிதி அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” 

அரசாங்கம் வருவாயை அதிகரித்து விரைவாக வருமான இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.

மேலும் இந்நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது. தற்போதுள்ள முறையில் வருமான வரி செலுத்தாதவர்களிடமே வருமான வரி அறவிடப்படவேண்டும் இவ்வாறு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!