இலங்கையுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பில்கேட்ஸ் அறக்கட்டளை!

#SriLanka #Sri Lanka President #America
Mayoorikka
2 years ago
இலங்கையுடன் ஒப்பந்தத்தில்  கைச்சாத்திட்ட பில்கேட்ஸ் அறக்கட்டளை!

இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்று விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்திற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகும்.

 விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ஏழு அமைச்சுக்களிடமிருந்து உரிய தரவுகள் பெறப்பட்டு இத்திட்டம் தொடரும். புதிய மென்பொருள், உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை நேரடியாக அளவிடுவதற்கும், கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாப்பதற்கும் தேவையான வழிகாட்டுதலை விவசாயிகளுக்கு வழங்கும்.

 இந்நாட்டின் விவசாய அபிவிருத்திக்காக இத்திட்டத்தின் மூலம் 250 மில்லியன் டொலர்கள் மானியம் பெறப்பட்டுள்ளதுடன், நெல் மற்றும் ஏனைய பயிர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க விவசாயத் துறையில் தரவுகளை சேகரிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!