சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் குண்டு வெடித்தாற் போல் வெடிப்புச் சத்தம்!
#Switzerland
#swissnews
#Lanka4
#BombBlast
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#லங்கா4
#Gas
#Tamil News
#Swiss Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
புதனன்று பாசல் நகரில் கரும்புகை மண்டலம் காணப்பட்டதாக செய்தி தெரிவிப்போர் கூறினர். ஒரு கட்டுமான அமைவிடத்தில் திடீரென அனைத்தும் அதிர்ந்த வண்ணம் பாரிய வெடிப்புச் சத்தம் ஒலித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர். எவரும் காயமடையவில்லை.
விசாரணைகளின் போது தெரியாத காரணத்தினால் ஒரு கட்டுமான இடத்தில் ஒரு வாயுப்போத்தல் வெடித்து சுமார் 300மீற்றர் வீசப்பட்டுள்ளது. இதனால் அச்சூழலில் பலர் ஏதோ குண்டு வெடித்துள்ளாதாக அஞ்சினர்.

கட்டுமான இடத்தில் பூச்சு பூசும் தொழிலாளி ஒருவர் தான் மின்ஏற்றியில் சென்று கொண்டிருந்த போது வெல்டிங் செய்வது போல் தீ பிளம்புகள் வெடிப்புச் சத்தத்துடன் வெளியேறியதாக கூறினார்.
தற்போது நிலைமைகள் சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.