இஸ்ரேல் போர் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப்

#America #Israel #President #Trump #Fight #Hamas
Prasu
2 years ago
இஸ்ரேல் போர் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப்

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- கொடியது. குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

நான் உங்களுடைய அதிபராக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது'' என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4