பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையில் மீண்டும் போர்ப் பதற்றம்!

#War #foreign
PriyaRam
2 years ago
பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையில் மீண்டும் போர்ப் பதற்றம்!

பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது இன்று ரொக்கட் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அதிகளவிலான போராளிகள் அந்த பிரதேசத்திற்குள் ஊடுருவியுள்ளனர்.

காஸாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ரொக்கட் குண்டுகள் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலைமையை அடுத்து உடனடியாக பாதுகாப்பு பிரதானிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் செயலகம் தெரிவித்துள்ளது. 

காஸா பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் எல்லையில் உள்ள தமது வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து, கடலோரப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ரொக்கட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4