அப்பக்கடை நடத்தினால் நாட்டிற்கு இலாபம் கிடைக்கும் என்கிறார் சாமர சம்பத் தஸநாயக்க!

#SriLanka #Parliament
PriyaRam
9 months ago
அப்பக்கடை நடத்தினால் நாட்டிற்கு இலாபம் கிடைக்கும் என்கிறார் சாமர சம்பத் தஸநாயக்க!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்ப கடை ஒன்றை நடத்தினால், சிறந்தது என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகின்றது என்றால் அப்பக்கடையை திறப்பது சிறந்த இலாபத்தை கொடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

அளுத்கமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு ஒரு பில்லியன் ரூபாவை வழங்குவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள பொஸ்பேட் நிறுவனத்தை தான் பொறுப்பேற்கும் போது 150 மில்லியன் ரூபா நஷ்டத்தில் காணப்பட்டது எனவும் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்த முடியாமல் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

தான் பொறுப்பேற்று 8 மாதங்களில் 350 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்க முடிந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணிக்க கல் ஏற்றுமதியில் 350 மில்லியன் ரூபா, பீ.சீ.சீ நிறுவனத்தில் 100 மில்லியன், சீமெந்து கூட்டுத்தாபனத்தில் 100 மில்லியன் என அரசாங்கத்திற்கு தனது அமைச்சின் கீழ் ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்க முடியும் எனவும் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டுள்ளார்.