இந்தியாவில் சீரற்ற காலநிலையால் 82 பேர் மாயம்!

#India #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
இந்தியாவில் சீரற்ற காலநிலையால்  82 பேர் மாயம்!

இந்தியாவின் சிக்கிம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்,  23 இராணுவ வீரர்கள் உட்பட 82 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலைக் காரணமாக, இதுவரை வெவ்வேறு இடங்களில் இருந்து 10 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 82 பேர் காணமல்போயுள்ளதாகவும் அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக சிக்கிமில் கடுமையான மழையுடன் சேர்த்து பனிப்பாறை வெடிப்பு வெள்ளத்தை தூண்டியதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு