8.4 பில்லியன் நஷ்டம்: அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தல்.

#SriLanka #Resign #Minister #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
8.4 பில்லியன் நஷ்டம்: அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தல்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டிற்கு 8.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று வினவினார்.

"களைகளுக்குப் பதிலாக மலர்ச் செடிகளை நாட்டுவோம்" என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் தற்போதைய நிலை இதுவென்றால், வலு சக்தி அமைச்சர் எப்போது பதவி விலகுவார் என அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் குமார ஜெயக்கொடி, இது பழகிப்போன ஒரு பழக்கம் என்றும், மற்றவர்களும் தங்களைப் போலவே இருப்பதாக நினைத்து இவ்வாறான கேள்விகளைக் கேட்பதாகவும் தெரிவித்தார். 

மேலும், இந்தக் கேள்வி தமக்குத் தொடர்பற்றது என அவர் கூறி பதிலளிக்க மறுத்தார். அமைச்சரின் இந்தப் பதிலைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தமக்கு முறையான பதில் கிடைக்காததால், ஹெக்டர் அப்புஹாமி தனது அடுத்த கேள்வி கேட்கும் வாய்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிற்கு வழங்கினார்.

இதன் போது நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அமைச்சர் எப்போது பதவி விலகுவார் என மீண்டும் வினவினார்.

இருப்பினும், அந்தப் பிரச்சினையும் தமக்குத் தொடர்பற்றது என அமைச்சர் மீண்டும் தெரிவித்ததையடுத்து, சபையில் உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4