நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

#world_news #Earthquake #2023 #Tamilnews #Nepal #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணிக்கு ரிக்டர் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மதியம் 2.51 மணியளவில், 6.2 ரிக்டர் அளவில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறிப்பாக தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4