மீண்டும் நாடு திரும்பும் கிரிக்கெட் வீரர் தனுஷ்க்க குணதிலக!
#SriLanka
#Sri Lanka President
#Australia
#Srilanka Cricket
Mayoorikka
2 years ago
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்புகின்றார்.
இவர் சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்புகின்றார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றமற்றவர் என சிட்னி நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் நாடு திரும்புகின்றார்.
அத்துடன் அவர் இன்று இரவு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ணப் கிரிக்கட் போட்டியின் போது, தனுஷ்க குணதிலக்க பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் , இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.