இத்தாலியில் இருந்து வரும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த சுவிஸ் நடவடிக்கை!
#Switzerland
#world_news
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இத்தாலியிலிருந்து வரும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்கு சுவிஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக நாட்டின் எல்லைப்பகுதிக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியிலிருந்து, சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணம் வழியாக கூடுதல் புலம்பெயர்வோர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முற்படலாம் என அரசு எதிர்பார்க்கிறது.
ஆகவே, தெற்கு எல்லைக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்புவதாக, பெடரல் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, 12,000 புலம்பெயர்வோர் இத்தாலியின் Lampedusa தீவுக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், அந்தத் தீலிருந்து அவர்கள் Ticino மாகாணம் வழியாக சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.