பிரான்ஸில் மகிழுந்தில் தனி ஒருவர் பயணிக்கும் நிலையால் சுற்றுச்சூழல் மாசு

#France #Lanka4 #வாகனம் #லங்கா4 #pollution #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
8 months ago
பிரான்ஸில் மகிழுந்தில் தனி ஒருவர் பயணிக்கும் நிலையால் சுற்றுச்சூழல் மாசு

பிரான்சில் காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவர்களில் 80% சதவீதமானோர் தங்களது மகிழுந்துகளில் தனி ஒருவராக பயணிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 2023 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை கிட்டத்தட்ட 500,000 மகிழுந்துகள் கண்காணிக்கப்பட்டன.

 வீதி கண்காணிப்பு கமராக்களூடாகவும், செயற்கை நுண்ணறிவு செயலி ஊடாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரான்சில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 80.3% சதவீதமான மகிழுந்துகளில் ஒருவர் மட்டுமே பயணிப்பதாக தெரியவந்துள்ளது. 

 குறிப்பாக காலை 8 மணிக்கு அதிகபட்சமாக 87% சதவீதமானோர் அவ்வாறு பயணிக்கின்றனர். இந்த ஆய்வின் அவசியம் என்ன..? பிரான்சில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதேவேளை, வாகனங்களால் ஏற்படும் சுற்றுசூழல் மாசடைவும் அதிகரித்துள்ளது. covoiturage என அழைக்கப்படும் 'மகிழுந்தில் இணைந்து பயணிக்கும்' முறை குறித்த பிரச்சாரங்கள் தொடர்ந்து வலுத்து வருகிறது. 

 அதன் ஒருபகுதியாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நால்வர் பயணிக்கக்கூடிய மகிழுந்தில் ஒருவர் மட்டும் பயணிப்பது இயற்கைக்கு செய்யும் அதிகபட்ச தீங்கு என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆய்வினை பிரபல வீதி அவதானிப்பாளர்களான Vinci நிறுவனம் மேற்கொண்டுள்ளது.