அவிசாவளையில் நான்கு பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

#Sri Lanka #Death #Police #Gun_Shoot
Prathees
2 months ago
அவிசாவளையில் நான்கு பேரை இலக்கு வைத்து  துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

அவிசாவளை மேல் தல்துவ பிரதேசத்தில் நான்கு பேரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

 மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

 தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 36 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 காயமடைந்த இருவரும் தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 42 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு