உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம்!

#India #sports #2023 #Tamilnews #Player #Breakingnews #Sports News
Mani
2 months ago
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம்!

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டிஜெனீரோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அவர் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் தகர்த்தார்.

நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடம் பெற்றது.

தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு