நீரிழிவிற்கு சிறந்த மரக்கறி வெண்டைக்காய்

#Health #Vegetable #Lanka4 #ஆரோக்கியம் #diabetes #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #சலரோகம்
Mugunthan Mugunthan
2 months ago
நீரிழிவிற்கு சிறந்த மரக்கறி வெண்டைக்காய்

பச்சைக் காய்கறிகளில் வெண்டைக்காய் பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறி எனலாம்.

 வெண்டைக்காய் கறி சுவையில் மட்டுமல்ல மருத்துவ குணங்களிலும் சிறந்தது. வெண்டைக்காயின் உள்ளே இருக்கும் பகுதி தும்மலை போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். 

வெண்டைக்காய் மட்டுமல்ல, அதில் தயாரித்த நீரும் மிகவும் நன்மை பயக்கும். இதனை அருந்துவதால், உங்கள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும்.

அதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளலாம். பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆகியவை வெண்டைக்காயில் காணப்படுகின்றன. 

வெண்டைக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது.

 நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பது, ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

இது தவிர, துருக்கியில் , சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்க வறுத்த வெண்டைக்காய் விதைகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1694244147.jpg

மேலும் மரண அறிவித்தல்களுக்கு