பிரான்ஸின் பரிஸ் நகரில் இரு படகுகள் மோதி விபத்து - 16 பேர் காயம்
#France
#Accident
#Lanka4
#விபத்து
#லங்கா4
#Boat
#Injury
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago

சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. port of Grenelle பகுதியில் சென் நதியில் இரு படகுகள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், இரவு 11 மணிக்கு பின்னதாக இரு படகுகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் மொத்தமாக 16 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



