பிரான்ஸில் முன்னாள் பிரதமர் Bernard Cazeneuve மீண்டும் அரசியலுக்குள்

#Prime Minister #France #Lanka4 #அரசியல் #லங்கா4 #பிரான்ஸ்
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸில் முன்னாள் பிரதமர் Bernard Cazeneuve மீண்டும் அரசியலுக்குள்

பிரான்சுவா ஒலோந்து ஜனாதிபதியாக இருந்தபோது அவரது அரசாங்கத்தின் பிரதமராக இருந்த Bernard Cazeneuve, மீண்டும் அரசியல் களத்தில் நுழைகிறார்.

 Pontault-Combault (Seine-et-Marne) நகரில் மிகப்பெரும் அரசியல் மாநாடு ஒன்றை கூட்ட உள்ளார். “La Convention” என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தினை அந்நகரின் முதல்வர் Gilles Bord உடன் இணைந்து மேற்கொள்ள உள்ளார்.

 சோசலிச கட்சியில் இருந்த Bernard Cazeneuve, அக்கட்சி Nupes கூட்டணிக்கட்சியாக இணைந்துகொள்ள, அவர் அதில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருந்தார்.

 இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசியல் மாநாட்டை அவர் ஒன்றுகூட்டுகின்றார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று புதன்கிழமை மாலை Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் அரசிய தலைவர்களுடனான மாநாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

 இந்நிலையில் முன்னாள் பிரதமர் Bernard Cazeneuve, மீண்டும் அரசியல் களத்தில் நுழைந்துள்ளமை வரவேற்கப்பட்டுள்ளது.