பிரான்ஸில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியதால் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
#France
#Rain
#District
#Lanka4
#Warning
#வெப்பமயமாதல்
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago
இந்த வாரம் முழுவதும் நிலவிய கடும் வெப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இன்று நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆறு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Drôme,
Ardèche,
Isère,
Savoie,
Haute-Savoie,
Ain
ஆகிய ஆறு மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை அவதானிப்பாளர்களான Météo-France அறிவித்துள்ளனர்.