பிரான்ஸின் பரிஸ் நகரசபைக்கு முன்பாக அகதிகள் கூட்டம்
#France
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago
பரிஸ் நகரசபைக்கு முன்னால் தங்கியிருந்து ‘தங்குமிட கோரிக்கை வைத்திருந்த’ அகதிகள் பலரை அரசு மீள் குடியேற்றம் செய்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து பரிஸ் நகரசபைக் கட்டிடத்தின் (Hôtel de ville) முற்றத்தில் அகதிகள் பலர் தங்கியுள்ளனர். அங்கு கின்னியா, ஐவரி கோஸ்ட், மாலி போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 226 அகதிகள் சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததுடன், தங்குமிட கோரிக்கையும் வைத்திருந்தனர்.
ஆனால் நகரசபை இந்த அகதிகள் தொடர்பான பிரச்சனையை அரசிடம் கொண்டுசென்றிருந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் நேற்று புதன்கிழமை காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கான தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.