நீரிழிவு நோயானது கிராமப்புறங்களில் குறைவாகக் காணப்படுவது ஏன்?

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #சலரோகம் #Diabetics #Hypertension
Mugunthan Mugunthan
8 months ago
நீரிழிவு நோயானது கிராமப்புறங்களில் குறைவாகக் காணப்படுவது ஏன்?

உலகில் வளர்முக நாடுகள் முகம் கொடுத்துள்ள பெரும் ஆரோக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நீரிழிவு நோய் இலங்கையிலும் குறிப்பிடத்தக்களவானோரைப் பாதிக்கவே செய்திருக்கின்றது. 

தொற்றா நோய்களின் இனம் காணப்படாத வகையைச் சேர்ந்த ஒன்று என்றாலும் இன்றைய காலகட்டத்தில் இது மனித ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக நீரிழிவு விளங்குகின்றது.

 அதன் காரணத்தினால் நீரிழிவு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் தவறான நம்பிக்கைகளைக் களைவது காலத்தின் அவசியத் தேவை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் வலியுறுத்தி உள்ளார். 

இந்நோயை முழுமையாகத் தவிர்ந்து கொள்ள ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு, நடத்தை, பழக்கவழக்கம் என்பன பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அது தான் உண்மை. இந்நாட்டில் நீரிழிவு நோயை எடுத்துப் பார்த்தால் அது ஆரம்பத்தில் நகரப் பிரதேசங்களில் தான் இனம் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக 1994இல் 2வீதத்தினரே இந்நோய்க்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

 ஆனால் இது கடந்த இரு தசாப்த காலப்பகுதியில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதோடு கிராமியப் பிரதேசங்களுக்கும் வியாபித்துள்ளது. இன்று நகரப் பிரதேசங்களில் வசிப்பவர்களில் 14 -- 15வீதத்தினர் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்று மருத்துவத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் கிராம மக்களின் வாழ்க்கை முறையே நீரிழிவுக்கு நல்ல தீர்வாகக் கருதப்பட்டது. அதனால் கிராம மக்களைப் போன்று உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டால் இந்நோய்க்கு தீர்வு கிடைக்கும் எனப் பெரும்பாலானவர்கள் கருதினர்.

images/content-image/1692777453.jpg

 ஆனால் அந்த நம்பிக்கை இப்போது செல்வாக்கிழந்து விட்டது. ஏனெனில் தேவைக்கு ஏற்ப வேளா வேளைக்கு உணவு உட்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியமானது என்பது இன்று தெளிவாகியுள்ளது. 

 குரக்கன், சிகப்பரிசி போன்றவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவக் கூடியவை தான். அதற்காக உண்ண வேண்டிய அளவைக் கவனத்தில் கொள்ளாது அன்றாடம் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு உகப்பானதல்ல. 

ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் நாளாந்தம் தேவைப்படும் கலோரி அளவு காணப்படுகின்றது. அந்த அளவுக்கு மேற்பட்ட கலோரி உடலில் சேரும். அது தான் இன்று நடந்திருக்கின்றது. 

 உதாரணத்திற்கு இலங்கையரின் உணவில் பிரதானமாகக் காணப்படும் பருப்பை எடுத்துப் பார்த்தால் அதில் 90வீதம் காபோஹைதரேட்டு காணப்படுகின்றது. அந்தவகையில் இந்நாட்டினர் உண்ணும் உணவு வகைகளின் ஒட்டு மொத்த கலோரி பெறுமானத்தை நோக்கினால் ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு தேவையான கலோரி பெறுமானத்தை விடவும் மூன்று மடங்கு கலோரி பெருமானம் இப்போது உடலில் சேர்கின்ற நிலைமை காணப்படுகின்றது. 

ஒரு பிஸ்கட்டை எடுத்துப் பார்த்தால் அதில் கூட சுமார் 10கலோரி உள்ளது. சில பிஸ்கட்களில் சீனி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவற்றில் காபோஹைதரேட் இருப்பதை மறந்து விட முடியாது. 

ஒரு ஆனை வாழைப்பழத்தில் 120கலோரி உள்ளது. ஒரு கிளாஸ் இலைக்கஞ்சியில் அதற்கு சேர்க்கப்படும் தேங்காய்ப்பாலுக்கு ஏற்ப 100கலோரி காணப்படுகின்றது. இவை இன்றைய நவீன வாழ்க்கை அமைப்புக்கு ஏற்றதல்ல. 

 ஆனால் அன்று கிராம மக்கள் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டனர். அதனால் அவர்களது உணவில் காணப்பட்ட கலோரி உடலில் தகனமடைவது இலகுவான காரியமாக இருந்தது. இப்போது அவ்வாறான நிலைமை இல்லை. அதன் காரணத்தினால் நவீன வாழ்வமைப்புக்கு ஏற்ப உணவு பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1692777867.jpg