நீரிழிவால் ஏற்படும் உயிராபத்தான நோய்களும் கட்டுப்படுத்தலும்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Antoni #Theva #Antoni Thevaraj
Mugunthan Mugunthan
8 months ago
நீரிழிவால் ஏற்படும் உயிராபத்தான நோய்களும் கட்டுப்படுத்தலும்

இன்று மிக வேகமாகப் பரவி வருகின்ற தொற்றா நோய் நீரிழிவாகும்.பொதுவாக தொற்று நோய்கள் தான் சமூகத்தில் வேகமாகப் பரவுவதை அறிவீர்கள்.ஆனால் புத்தாயிரமாண்டின் ஆரம்பத்திலிருந்து மிக வேகமாகப் பரவலாகி மருத்துவ உலகுக்கும்,மக்களுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

 நீரிழிவின் தாக்கத்தினால் துரிதமாக ஏற்படுகின்ற மாரடைப்பு,இதயநோய்கள்,ஸ்ரொக்,சிறுநீரக செயழிலப்பு,கண் பார்வை இழப்பு,அங்கவீனம் முதலான பாரதூரமான நோய்களும்,இவற்றால் ஏற்படுகின்ற மரணங்களும் நீரிழிவு பற்றி அதிகம் சிந்திக்க வைத்துள்ளது.

 நீரிழிவின் அறிகுறிகள் நீரிழிவு நோயின் 

அறிகுறிகள் ஆரம்பத்தில் வெளித் தெரிவதில்லை.நோயின் தாக்கம் அதிகரிக்கும் போது அதிக தாகம்,அடிக்கடி பசித்தல்,கூடுதலாக சிறுநீர் கழித்தல்,குறிப்பாக இரவில் அதிக சலம் போதல்,களைப்பு,எடைகுறைதல்,முதலான அறிகுறிகள் தோன்றும்.

புண்கள் ஆறாமை,பாலுறுப்புக்களில் தொற்று என்பனவும் ஏற்படலாம். நோய் தீவிரமடைந்து உறுப்புக்கள் பாதிக்கப்படும் போது கண்பார்வை குறைபாடு,மார்பு வலி,மயக்கநிலை உட்பட பல அறிகுறிகள் தோன்றலாம்.

மாரடைப்பு,கோமா மயக்கநிலை,பாத விறைப்பு,பாதங்களில் வலி,பாலுறவில் ஈடுபாடின்மை என்பனவும் ஏற்படலாம். கருத்தறித்தவர்களில் கருச்சிதைவு,கடினமான பிரசவம்,பெரிய குழந்தை,குறைபாடுடைய குழந்தை என சிக்கல்கள் ஏற்படலாம்.

 கட்டுப்பாடற்ற நீரிழிவின் தாக்கங்கள்

 நீரிழிவு நோய் இன்று வரை முழுமையாக குணப்படுத்த முடியாத நோயாக இருப்பினும் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சுகதேகியாக வாழமுடியும்.

மருந்துகளால் மாத்திரம் நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாது.உரிய மருந்துகளைப் பாவிப்பதுடன்,உணவுக் கட்டுப்பாடும்,உடற்பயிற்சியும் அவசியமாகும்.

உணவைப் பொறுத்தவரை கலோரிப் பெறுமானம் குறைவாக உள்ள உணவுகள் சிறந்தவை.தினமும் தேகப்பியாசம் அல்லது வேகநடைஎன்பன சிறந்த உடற்பயிற்சிகளாகும்.சைக்கிள் ஓடுதல்.நீச்சல் முதலான அப்பியாசங்களும் சிறந்தவை.

ஓரிடத்தில் அமர்ந்திருந்து அதிக உடலியக்கமின்றி வாழ்பவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காது விட்டால் உடல் உறுப்புக்கள் மெதுவாக பாதிப்புக்குள்ளாகி படிப்படியாக பாரதூரமான நோய்களை உருவாக்கும்.

முதலில் குழாய்களைப் பாதிக்கும்.அதேவேளை நரம்பு மண்டலங்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.குருதிக் குழாய்க்குள் கொலஸ்ரோலை படியவைப்பதனால் குருதிச் சுற்றைப் பாதிக்கும். 

இதனால் இதயம்,சிறுநீரகம்,ஈரல்,மூளை,கண்கள்,பாதங்கள்,உட்பட பல்வேறு உறுப்புக்களும் பாதிப்புக்கு உள்ளாகும்.மாரடைப்பு,பக்கவாதம்,இதய செயலிழப்பு,சிறுநீரக செயலிழப்பு,பார்வை இழப்பு,அங்கவீனம் முதலான பாதிப்புக்களும்,இவற்றால் மரணமும் ஏற்படலாம்.

 நீரிழிவின் அறிகுறிகள் வெளித் ​ தெரிய முன்னதாகவே உடலுள் நீரிழிவு நோய் ஏற்படலாம் என்பதால் இருபது வயதைக் கடந்த ​அனைவரும் வருடத்தில் ஒரு தடவையாவது குருதி குளுககோசின் அளவை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

இதனால் நோய் தீவிரமடைய முன்னர் சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்பதுடன்,நீரிழிவின் தாக்கத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்தான நோய்களிலிருந்தும் விடுபட முடியும்.சிறுவயதிலிருந்தே உடலின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.அத்துடன் சமச்சீரான சமபல உணவுகளை உட்கொள்வதுடன்,உடலுழைப்பிலும் ஈடுபட வேண்டும்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1692605093.jpg