பிரான்ஸ் இராணுவ வீரர் ஈராக்கில் மரணம்
#Death
#France
#Lanka4
#Iraq
#மரணம்
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago
ஈராக்கில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கை ஒன்றில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகை (l'Élysée) இத்தகவலை நேற்று வெளியிட்டது.
“ஈராக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஜனாதிபதி மாளிகை அறிந்துகொண்டுள்ளது. அவர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது!” என எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட வீரருடன் மற்றொரு வீரரும் உடன் இருந்ததாகவும், அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.