பிரான்ஸிற்கு சுற்றுலா வந்த இரு சுவிஸ் பெண்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்
#France
#Accident
#Women
#Lanka4
#விபத்து
#லங்கா4
#பெண்கள்
#சுவிஸ்
#Swiss
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
2 years ago

பிரான்சுக்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளனர். பிரான்சின் தென்மேற்கு நகரமான Sainte-Hélène (Gironde) இல் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பிரான்சுக்கு வருகை தந்த 21 வயதுடைய இரு இளம் பெண்கள், ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நிலையில், வீதியில் பயணித்த மற்றொரு ஸ்கூட்டருடன் மோதியுள்ளது.
D6 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இவ்விபத்தில், குறித்த இரு பெண்களும் பலியாகியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டரில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மது போதையில் ஸ்கூட்டரைச் செலுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.



