10 கோடி பார்வையாளர்களை கடந்த லியோ திரைப்பட பாடல்

#TamilCinema #Lanka4
Prasu
2 years ago
10 கோடி பார்வையாளர்களை கடந்த லியோ திரைப்பட பாடல்

'நா ரெடி'பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள'லியோ' திரைப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில், 'லியோ' படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!