சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவம்

#SriLanka #Mannar #Temple #Event #Lanka4
Kanimoli
10 months ago
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோற்சவம்

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹோட்சவ கொடியேற்றமும் அலங்கார வளைவு திறப்பு விழாவும் இன்றைய தினம் புதன்கிழமை (16) மதியம் சிறப்பாக நடைபெற்றது.

images/content-image/1692196693.jpg

 மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவ திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும், அமைக்கப்பட்ட அலங்கார வளைவு திறப்பு விழாவும் ஆலயத்தின் திருவிழா பிரதம குரு சி.ஸ்ரீ சண்முகநாத குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான அம்பிகையின் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

images/content-image/1692196709.jpg 

 வழமையாக 10 நாட்கள் கொண்ட மஹோட்சவ திருவிழாவானது இம்முறை 15 நாள் திருவிழாவாக ஏற்பாடு செய்யப்பட்டு எதிர்வரும் 31ம் திகதி நிறைவு பெறவுள்ளது.

images/content-image/1692196739.jpg

 மேலும் புஸ்பாஞ்சலி, அன்ன பூரண, திருவிழா, கற்பூரத் திருவிழா, வசந்த உற்சவம், சங்காபிஷேகம், வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தம், வைரவர் சாந்தி, என்று 15 நாள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.