ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நாளை நடைதிறப்பு
#India
#Temple
#spiritual
#சிறப்பு
#Special Day
Mani
2 years ago

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும் மாத பூஜையில் பக்தர்கள் பங்கேற்க உள்ளது. இதன் மூலம் சாமி தரிசனம் செய்யவும் வழிபடவும் வாய்ப்பு உள்ளது.
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.
நாளை பூஜைகள் கிடையாது. இருப்பினும் நாளை மறுநாள் தொடங்கி திங்கள்கிழமை வரை தினமும் கணபதி ஜோமம், உஷா பூஜை, புஷ்பாபிஷேகம் போன்ற வழக்கமான பூஜைகள் நடைபெறும். மேலும், படி பூஜை, உதயாஸ்தமய பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடக்கும்.



