பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்களின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்ட திருக்குறள் மாநாடு

#Meeting #spiritual #Day # Thirukkural #Lanka4 #ஆன்மீகம் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்களின் 76 ஆவது பிறந்தநாளை முன்னிட்ட திருக்குறள் மாநாடு

உலகத் திருக்குறள் மையம் 

 திருக்குறள் வளர்ச்சி வரலாற்றில்..... 

 1000 திருக்குறள் ஆய்வரங்குகள் நடத்தியவர்; 

 1000 திருக்குறள்  ஆய்வரங்குகள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியவர்; 

 1000 திருக்குறள் ஆய்வரங்குகளில் பங்கேற்றவர் ;

 1000 திருக்குறள் நிகழ்வுகள் ஒரே ஆண்டில் நடத்தியவர்; 

 1000 தலைப்புகளில் ஆய்வுரைகள் வழங்கியவர்;  

 1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர்

 என ஒரு 100 சாதனைகள் நிகழ்த்திய திருக்குறள் உலகின் முதன்மைச் சாதனையாளர் பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் விழா

 இரண்டு நாள் மாநாடு

12-08-2023 சனிக்கிழமை வள்ளுவர் கோட்டம்,  காலை 9 - 00  மணி முதல் மாலை 5-00 மணி வரை 

 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை காணொளி வழி மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை 

*திருக்குறள் நூல்கள் கண்காட்சி

* திறனாய்வரங்கம் 

*கவியரங்கம் 

*இசையரங்கம்

 *7 நூல்கள் வெளியீடு

 *திருக்குறள் தூதர்கள் பட்டமேற்பு உலகச் சாதனையாளர் விருதுகள் வழங்கல் 

 நாமும் சாதிப்போம் என்னும் புத்துணர்ச்சி பெற,

 புறப்படத் தயாராகுங்கள்! 

 நண்பகல் உணவு எத்தனைச் சான்றோர்களுக்கு எனக் கணக்கிட வேண்டியுள்ளதால் காலை 10 மணிக்குள் வருகை தருவோர்க்கு டோக்கன் வழங்கப்படும். ஏனைய விவரங்கள் தங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில்...

நன்றி 

 தங்கள் வரவு உறவு நாடும், 

 பொறுப்பாளர்கள் 

 உலகத் திருக்குறள் மையம்