முன்னைய அமைச்சர்களை விட குறுகிய தூர பயணத்திற்கும் விமானங்களை பயன்படுத்தும் ரிஷி!
#Lanka4
Thamilini
2 years ago
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முந்தைய அமைச்சர்களை விட குறுகிய தூரங்களுக்கும் அதிகளவில் விமான போக்குவரத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் பதவியேற்ற முதல் ஏழு மாதங்களில், வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு விமானத்திலாவது பயணம் செய்வதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக RAF ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அவர் குறுகிய தூர விமான பயணத்திற்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விமானப் பயணமானது தனது நேரத்தை மீதப்படுத்தவும் பணிகளை மிகவும் திறம்பட செய்யவும் உதவியதாக இருப்பதாக பதிலளித்துள்ளார்.