திருத்தணி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது

#India #Tamil Nadu #Temple #spiritual #Tamil #2023 #Tamilnews
Mani
8 months ago
திருத்தணி முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா நடந்தது. தொடர்ந்து இரவு முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. குறிப்பாக, நேற்று இரண்டாம் நாள் தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க மரகதகல், தங்க கீரிடம், வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தெப்ப திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலுக்கு செல்ல நேற்று அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டது.

மாலை 7 மணிக்கு நடைப்பெற்ற 2-ம் நாள் தெப்பத்திருவிழாவில் உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் சமேதராய் மலையடிவராத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்திருவிழா நடக்கும் சரவணப்பொய்கை திருக்குளத்தை சுற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா முடிந்ததும் இசை நிகழ்ச்சி நடந்தது.

தெப்பத் திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், கோவில் துணை கமிஷனர் விஜயா, அறங்காவலர்கள் உஷா, சுரேஷ்பாபு, நாகன், மோகனன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.