மியான்மர் படகு விபத்தில் 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு

#Death #Accident #Boat #Myanmar
Prasu
2 years ago
மியான்மர் படகு விபத்தில் 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வங்காளதேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பித்து ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா மற்றும் இந்தோனேசியாவை அடைய முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில், மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர். 

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இதுவரை 17 சடலங்களை மீட்டுள்ளதாகவும், எட்டு பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 இவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!