ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் புதிய போஸ்டர் வைரல்
#India
#Cinema
#TamilCinema
#Tamilnews
Mani
1 year ago

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக அட்லீ, தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
மேலும் யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டு தேதி அறிவிப்பைத் தொடர்ந்து படக்குழுவினர் ஏராளமான போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.



