உலகில் மிகவும் மாசுப்பட்ட நகரமாக ஜகார்த்தா தெரிவு!
#world_news
#Lanka4
#pollution
Dhushanthini K
2 years ago

உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரமாக இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய காற்று மாசுபாடு குறித்து சுவிஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஜகார்த்தாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காற்று மாசுபாட்டின் விளைவுகளால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



