பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிதவை படகு!

#world_news #Lanka4 #Britain #Asylum Seekers
Thamilini
2 years ago
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிதவை படகு!

பிரித்தானியாவில், புகலிடக்கோரிக்கையாளர்களை விடுதிகளில் தங்கவைப்பதால், ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த, அவர்களை மிதவை படகுகளில் தங்கவைக்கும் திட்டத்தின் முதல் படியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாகஅந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

பிரித்தானிய அரசு Barge எனப்படும் மிதவை படகு ஒன்றை  புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக உருவாக்கியுள்ளது. இந்த படகிற்கு Bibby Stockholm  எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

222 பேர் தங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த படகில் தற்போது 15 பேர் முதல்படியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த படகு ஆபத்தானது எனவும், லைஃப் ஜாக்கெட்டுக்கள் கூட இல்லை எனவும், தீ பற்றினால் அதனை அணைக்கும் பிரச்சினைகள் இருப்பதாகவும், சமூக ஆர்வளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

இருப்பினும் இந்த படகில் தங்காதவர்களுக்கு அரசு ஆதரவளிக்காது என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!