கல்வி ராஜாங்க அமைச்சரின் மகனை அழைத்து குறைகளை கூறிய வலயக் கல்வி அலுவலகம்

#SriLanka #Lanka4 #Ministry of Education #education
Kanimoli
2 years ago
கல்வி ராஜாங்க அமைச்சரின் மகனை அழைத்து குறைகளை கூறிய வலயக் கல்வி அலுவலகம்

கல்வி ராஜாங்க அமைச்சரின் மகனை அழைத்து குறைகளை கூறிய வலயக் கல்வி அலுவலகத்தினரின் செயற்பாடு தொடர்பிலும், அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு வந்த மவுசு தொடர்பிலும் கல்விச் சமூகம் வியப்பிடைந்துள்ளது. கல்வி ராஜாங்க அமைச்சின் பிரத்தியேக செயலாளர் என தன்னை அடையாளப்படுத்தியவாறு, அரவிந்தகுமாரின் மகன் இன்று அதிகாரிகளுடனான சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

 கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பணிமனையில் வலயக்கல்வி பணிப்பாளர் தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் குறித்த நபருக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வலயத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அவருக்கு கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி அதிகாரிகளின் இந்த செயற்பாடு அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும் மதிப்பளிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளமை தொடர்பில் பலரும் அதிர்ப்தி வெளியிட்டுள்ளனர்.

 கல்வி தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் அறிய விரும்பின் அமைச்சர் நேரடியாகவோ அல்லது அறிக்கை மூலமாகவோ அறிந்து கொள்ள முடியும். தனது வாரிசை அனுப்பி இவ்வாறு நடந்துகொண்டதும், அதற்கு வலயக்கல்வி பணிப்பாளர் அமைச்சருக்கு நிகரான செயற்பாட்டை முன்னெடுத்ததும் ஒட்டுமொத்த கல்வி சமூகத்தை தலைகுனிய செய்துள்ளதாகவும், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒவ்வொருவரும் இவ்வாறு நடந்து கொள்ள முனைவார்கள் எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!