புற்றுநோயை உண்டாக்கும் E-951 இனிப்பு இலங்கை சந்தையில்: இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

#SriLanka #Food
Prathees
2 years ago
புற்றுநோயை உண்டாக்கும் E-951 இனிப்பு இலங்கை சந்தையில்: இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையிலும் பயன்படுத்தப்படும் E-951 என்ற இனிப்பான அஸ்பார்டேம் புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்தார்.

 அந்த இனிப்பைக் கொண்ட உணவுகள் இப்போது சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன என்றும் அவர் கூறினார்.

 பெரும்பாலான பச்சை நிற இனிப்பு பானங்கள் குறைந்த சர்க்கரை இனிப்பு பொருட்களில் இந்த இனிப்பைக் கொண்டிருப்பதாகவும் ரொஷான் குமார கூறினார்.

 மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாக்லேட், லாலிபாப் போன்ற சுவையூட்டும் உணவுகளிலும் இந்த ருசி கலந்துள்ளது என்றார்.

 இந்த இனிப்பைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!