பொதுஜன பெரமுன கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகள்!
அடுத்த ஆண்டு (2024) தேர்தல் ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும்.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
தற்போது ஜனாதிபதியாக இருக்கு ரணில் விக்கிரமசிங்க நாடு எதிர்கொண்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீளவும் பொதுஜன பெரமுன சார்பாக களமிறக்க முடியாத எனவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் பசில் ராஜபக்ஷவை களமிறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடுகளால் அதுவும் சாத்தியப்படவில்லை.
இதற்கிடையில் தற்போது சமல் ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் கட்சிக்குகள் மேலும் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.