வெளியானது ரணம் டீசர்; 25-வது படத்தில் சீரியஸ் கேரக்டராக வரும் வைபவ்!
#India
#Cinema
#Actor
#TamilCinema
#release
#trailer
#Tamilnews
#Movie
Mani
1 year ago

நடிகர் வைபவ் நடிக்கும் ‘ரணம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘பபூன்’ படம் வெளியானது. இதையடுத்து வைபவ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘ரணம்’. ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார். வைபவ்வின் 25-வது படமாக இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.



