உக்ரைன் - ரஷ்ய போரை சமாதானப்படுத்த சவுதி அரேபியா அனுசரணை

#world_news #Lanka4 #SaudiArabia #போர் #Russia Ukraine
உக்ரைன் - ரஷ்ய போரை சமாதானப்படுத்த சவுதி அரேபியா அனுசரணை

உக்ரேன் - ரஷ்யா போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்த மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

 இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி மற்றும் சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் குறித்த இரு தினங்களில் சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

 அத்துடன் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள், இந்தப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவும் மேலும் அமைதியான ஒரு நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச ஆதரவை பெற்றுத் தரும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

 இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும் ஜூன் மாதம் கோபன்ஹேகனில் நடந்த ஒப்பீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

 மேலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சல்லிவன் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தத்தமது பங்கேற்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4