இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து நீக்க வேண்டும் என்று சிங்கப்பூர் கோரிக்கை
#India
#rice
#world_news
#Export
#Singapore
#Breakingnews
Mani
2 years ago

உள்நாட்டில் வினியோகத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த 20ம் தேதி தடை விதித்தது. இது பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சிங்கப்பூர் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து, இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு சிங்கப்பூர் கோரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக சிங்கப்பூர் உணவு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு வகையான அரிசிகளை பல்வேறு வழிகள் மூலம் இறக்குமதி செய்வதற்காக இறக்குமதியாளர்களுடன் சிங்கப்பூர் உணவு கழகம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அதேபோல், அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



