நைஜீரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது ; அதிபர் கைது!

#world_news #லங்கா4
நைஜீரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது ; அதிபர் கைது!

நைஜீரியா நாட்டினை ராணுவம் திடீரென ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது, உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நாட்டில் முகமது பசோவ்ம் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென ராணுவம் ஆட்சியை கைப்பற்றி அதிபரையும் கைது செய்துள்ளது.

 அதுமட்டுமின்றி நைஜீரிய நாட்டின் அரசியல் சாசனம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நைஜீரியா நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 மேலும் நைஜீரியா நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் நைஜீரிய நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்கு தெரியாமல் இருப்பதால் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!