வேலைவாய்ப்புகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

#Job Vacancy #world_news #Lanka4 #தொழில் #Salary #லங்கா4 #SaudiArabia
வேலைவாய்ப்புகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கும் நாடாக சவுதி அரேபியா திகழ்வதாக இசிஏ இன்டர்நஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலரிடம் உள்ளது. பெரும்பாலும் அதிக சம்பளம் வழங்கும் நாடுகளுக்கு செல்லவே போட்டி அதிகமாக உள்ளது.

 அதிக சம்பளம் என்று ஆசைப்பட்டு தவறான ஏஜென்சிகள் மூலம் பலர் வெளிநாடு சென்று ஏமாந்துவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. சவுதி அரேபியாவில் நடுத்தர அளவில் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,763 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

 உலகிலேயே இப்பணிக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சம்பளம் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும் உலகளவில் இதுவே அதிகபட்சம். அதேசமயம், மிகுந்த செலவினங்கள் நிறைந்த நகரமாக பிரிட்டன் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4