அமைச்சரின் செல்ல நாய்க்குட்டியை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் விபத்து

#SriLanka #Accident #Bus
Prathees
2 years ago
அமைச்சரின் செல்ல நாய்க்குட்டியை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் விபத்து

ஹப்புத்தளை நகரில் நேற்று (26) அதிகாலை 3.00 மணியளவில் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சாரதியும் அமைச்சரின் செல்ல நாய்க்குட்டியும் மாத்திரமே இருந்ததாக ஹப்புத்தளை பொலிஸார் கூறுகின்றனர்.

 விபத்தில் பேருந்துக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும்இ சாரதிக்கோ செல்ல நாய்க்குட்டிக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 வளர்ப்பு நாயின் சுகவீனத்திற்கு சிகிச்சை பெற்று கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த போது, ​​சாரதி தூங்கியதால் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 அமைச்சருக்குச் சொந்தமான இந்த சொகுசுப் பேருந்து செல்ல நாய்க்குட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அமைச்சரிடம் பல செல்ல நாய்க்குட்டிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!