பரத்தின் "லவ்" படத்தின் புதிய வீடியோ இணையத்தில் வைரல்
#India
#Rain
#HeavyRain
#ImportantNews
Mani
1 year ago

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான பரத், தற்போது லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் வாணி போஜன் நடித்துள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார். திரில்லர் வகை படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரைக்கு வரவுள்து. இப்படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், "லவ்" படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், இது தற்போது வைரலாக பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கோடையின் வாசலிலே என்று தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.



